இப்போது அவற்றில் ஆப்பிள் மற்றும் வாழைப்பழத்தை வைத்து எப்படி ஸ்மூத்தி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
ஆப்பிள் – 1-2 (தோலுரித்து, துண்டுகளாக்கப்பட்டது)
வாழைப்பழம் – 2
பால் – 2 கப்
சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் ப்ளெண்டரில், ஆப்பிள், வாழைப்பழம் மற்றும் பால் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து அதில் சர்க்கரை சேர்த்து, நன்கு மென்மையாக க்ரீம் போன்று வரும் வரை அடித்து, குளிர்ச்சியுடன் வேண்டுமெனில், ஐஸ் கட்டிகளைப் போட்டு ஒருமுறை அடித்து, பின் அதனை ஒரு டம்ளரில் ஊற்றி பரிமாற வேண்டும்.
இப்போது சுவையான ஆப்பிள் வாழைப்பழ ஸ்மூத்தி ரெடி!!! இது மாலை வேளையில் குடிப்பதற்கு ஏற்ற ஒரு பானம்.