ஸ்மூத்தி என்பது புத்துணர்ச்சியூட்டும் ஆரோக்கிய பானங்களில் ஒன்று. இவற்றில் பல சுவைகள் மற்றும் ஃப்ளேவர்கள் உள்ளன. அதிலும் வாழைப்பழம் உடலுக்கு சக்தி கொடுக்கும் பழங்களில் முக்கியமானவை. மேலும் இவற்றில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருள் அதிகம் உள்ளது.

எனவே அத்தகைய வாழைப்பழத்தை அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக, அதனை ருசியாக சாப்பிடும் வழியில் ஒன்றான ஸ்மூத்தியாக செய்து சாப்பிட்டால், அருமையாக இருக்கும். அதிலும் இந்த பானம் கோடையில் குளிர்ச்சியைத் தரும் ஒரு பானமாக இருக்கும். சரி, இப்போது அத்தகைய வாழைப்பழ ஐஸ் க்ரீம் ஸ்மூத்தி எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

வாழைப்பழம் – 2

ஆரஞ்சு ஜூஸ் – 1/3 கப்

வென்னிலா ஐஸ் க்ரீம் – தேவையான அளவு

வென்னிலா எசன்ஸ் – 1 டீஸ்பூன்

பால் – 1 கப்

ஐஸ் கட்டிகள் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் வாழைப்பழத்தை தோலுரித்துவிட்டு, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின் அந்த வாழைப்பழத்தை மிக்ஸியில் போட்டு, அத்துடன் ஐஸ் க்ரீம், பால், ஆரஞ்சு ஜூஸ், ஐஸ் கட்டிகள் மற்றும் வென்னிலா எசன்ஸ் சேர்த்து நன்கு நுரைக்க அடித்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதனை டம்ளரில் ஊற்றி பரிமாறினால், சுவையான வாழைப்பழ ஐஸ் க்ரீம் ஸ்மூத்தி ரெடி!!!